86 ஆயிரத்து 883 பேருக்கு பொங்கல் தொகுப்பு பரிசு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தாலுகாவில், 86 ஆயிரத்து, 883 நபர்களுக்கு, பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் பணிகள் நடக்கின்றன.

மேட்டுப்பாளையம் தாலூகாவில், 99 முழுநேர கடைகளும், 16 பகுதி நேர கடைகள் என மொத்தம், 115 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 86 ஆயிரத்து, 883 கார்டுதாரர்கள். இவர்களுக்கு தமிழக அரசு அறிவித்த, பொங்கல் தொகுப்பு பரிசான ஒரு கிலோ சர்க்கரை, பச்சரிசி, முழு கரும்பு மற்றும் தகுதி வாய்ந்தவர்களுக்கு, இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ரேஷன் கடைகளில், 68,757 ஆண்களுக்கு வேஷ்டிகளும், 68,687 பெண்களுக்கு சேலைகளும் வழங்கப்பட உள்ளன. காரமடை தோலம்பாளையம் சாலையில், பரிவேட்டை மைதானம் எதிரே காமராஜர் சாலையில் உள்ள ரேஷன் கடைகளில், பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement