கீரணத்தம் ஊராட்சி இணைப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவில்பாளையம்; 'கீரணத்தம் ஊராட்சி, மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதை கண்டித்து, 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

கோவை, மாநகராட்சியுடன், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தை சேர்ந்த கீரணத்தம் ஊராட்சி சேர்க்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்க்கார் சாமக் குளம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை:

கீரணத்தம் ஊராட்சியை, மாநகராட்சி உடன் இணைப்பதால், 100 நாள் வேலைத்திட்ட வேலை வாய்ப்பு பறிபோகும். வீட்டு வரி, குடிநீர் கட்டணம் பல மடங்கு உயரும். குப்பைக்கு தனியாக வரி வசூலிக்கப்படும்.

அடிப்படை வசதிக்காக மாநகராட்சியிடம் கையேந்தும் நிலை ஏற்படும். காலியிடங்களுக்கும் வரி விதிக்கப்படும். வீடு கட்ட வளர்ச்சி கட்டணம் பல மடங்கு உயரும்.எனவே, கீரணத்தம் ஊராட்சியை மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி அ.தி.மு.க., எஸ்.எஸ்.குளம், மேற்கு ஒன்றியம் சார்பில், கீரணத்தம் ஊராட்சி அலுவலகம் எதிரில், வரும் 11ம் தேதி காலை 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement