காட்டுப்பன்றி வேட்டையாடவெடியுடன் வந்தவர் கைது
காட்டுப்பன்றி வேட்டையாடவெடியுடன் வந்தவர் கைது
ஓசூர், : தேன்கனிக்கோட்டை அடுத்த மாட்டுஓணி பகுதியில் அவுட்காய் எனப்படும் வாய்வெடிகளை வைத்து, காட்டு பன்றிகள் வேட்டையாடப் படுவதாக, தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வனவர் தேவானந்தன், வனக்காப்பாளர் சுரேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட குழுவினர், அப்பகுதியில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படி, 2 வாலிபர்கள் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களில் வனத்துறையினர் ஒருவரை மடக்கி பிடித்தனர், மற்றொருவர் தப்பினார்.
விசாரணையில் அவர், குந்துகோட்டை அடுத்த குருபரப்பள்ளியை சேர்ந்த தேவராஜ், 19, என தெரிந்தது. அவரிடமிருந்து, 5 வாய் வெடிகளையும் ஒரு டூவீலரையும் வனத்துறையினர் பறிமுதல் செய்து, தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.