உசுப்பூரை நகராட்சியில் இணைக்க எதிர்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு, உசுப்பூர் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பா.ம.க., சார்பில் சப் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பா.ம.க., மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர்சஞ்சீவி, மாவட்ட துணை செயலாளர் ராஜா, நகர செயலாளர் தீலிப்ராஜன், கார்த்தி, உள்ளிட்டோர் சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மிராணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், சிதம்பரம் நகராட்சியோடு, பள்ளிப்படை, உசுப்பூர், லால்புரம், சி.தண்டேஸ்வரர் நல்லூர், நான்முனிசிபல், சி.கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

உசுப்பூர் ஊராட்சி இணைப்பை கைவிட வேண்டும், பல்வேறு பகுதிகளை உள்ளடக்கி, உசுப்பூர் தாய் கிராமமாக உள்ளது. இங்கு வாழும் பொது மக்கள் விவசாயத் தொழில், கூலி தொழிலாளிகள், கொத்தனார், பெயிண்டர் என ஏழை மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களால் நகராட்சிக்கான வரிகளை செலுத்தக் கூடிய தகுதி இல்லாத நிலையில் உள்ளனர்.

எனவே, நகராட்சியுடன் உசுப்பூர் ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.

Advertisement