குட்கா கடத்தல்: இருவர் கைது
சிதம்பரம்: மினி லாரியில், ரகசிய அறை வைத்து குட்கா கடத்தலில் ஈடுபட்டு, தலைமறை வான பெங்களூரு வாலிபர் உட்பட இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில்வே மேம்பாலம் கீழ் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் தர்மபுரி மாவட் டம், பெண்ணாகரம், ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த மணி மகன் விஜய், 24, காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையை சேர்ந்த முகமது ஹனிபா மகன் ஹாஜா மொய்தீன், 25; என, தெரிந்தது.
இருவையும் பிடித்தபோது, இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொட்கள் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 1.30 லட்சமாகும். இருவரையும் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த மாதம், இதில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவர், மினி லாரியில், ரகசிய அறை வைத்து ஒன்றரை டன் ஹான்ஸ் பொருட்கள் கடத்திவரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.