மருத்துவ முகாம் ரத்து

கள்ளக்குறிச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடக்கிறது. முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து தகுதி உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க ஒப்புதல் அளிக்கின்றனர்.

வரும் 16ம் தேதி பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறை என்பதால் அன்று நடக்கும் மருத்துவ முகாமும் நடக்காது. வரும் 23ம் தேதி வழக்கம் போல் முகாம் நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement