மயிலம் கல்லூரியில் முப்பெரும் விழா

மயிலம்: மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.

விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ராஜூவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். விழாவில் மயிலம் ஆதீனம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு பேசினார்.

விழாவில் காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி முன்னாள் முதல்வர் முருகசாமி, சென்னை திருமந்திர செந்நெறி வளர்ச்சி மைய இயக்குனர் பால வடிவேல், ராமசாமி கல்லுாரி பொறுப்பு முதல்வர் நாகநாதன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

உதவி பேராசிரியர் சதீஷ் நன்றி கூறினார்.

Advertisement