வீடூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமா? சட்டசபையில் சிவக்குமார் எம்.எல்.ஏ., கேள்வி

மயிலம்: மயிலம் அருகே உள்ள வீடூர் துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட வேண்டுமென சிவக்குமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடரில் மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார் பேசுகையில் வீடூர் கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றி தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இதற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில் தமிழ்நாட்டில் 2,786 ஆரம்ப சுகாதார நிலையங்களும் 8,713 துணை சுகாதார நிலையங்களும் உள்ளது.

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் மற்றொரு மருத்துவமனைக்கு இடையே எட்டு கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்க வேண்டும். மேலும் 30 ஆயிரம் பேர் அந்த பகுதியில் வசிக்க வேண்டும்.

இந்த விதிமுறைக்கு உட்பட்டிருந்தால் இந்த கோரிக்கை முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று இது குறித்து நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

Advertisement