தங்கவயல் செக் போஸ்ட்

* இது தேவையா?

முனிசி., நிதி 90 லட்சம் ரூபாயில் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் 120 லேப் டாப்பை மாணவர்களின் கல்விக்காக வாங்கினாங்க. இந்த லேப் டாப் எந்த மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களை தேர்வு செய்வது யாரு. இந்த சிக்கல் முனிசி., உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உறுப்பினர்கள் வாயைத் திறக்காமல் அடக்க, தலா 2 லேப் டாப் தருவதாக சொல்லிட்டாங்க. வட்டார கல்வித் துறை ஆபீசுக்கு 50 என ஒதுக்கீடு செய்திருக்காங்களாம். இதை, முனிசி.,யில் வெளிப்படையாக பேச முடியாமல் உறுப்பினர்கள் அங்கலாய்ப்பில் இருக்காங்க. 2 லேப் டாப் கொடுத்தால் யாருக்கு வழங்குவது. எத்தனை பேரை சமாளிப்பது என தலையை சொறிய விட்டுட்டாங்களே.

----

* சுருட்டியது யார்?

மாநிலத்தின் மாம்பழ நகரான சீனி., நகராட்சிக்கு 15 கோடி ரூபாய், 2018ல் நிதி ஒதுக்கினாங்க. இதில், நீச்சல் குளம், ஷட்டில்காக் உட்பட உள்விளையாட்டு அரங்கம் தயார்படுத்த திட்டம் போட்டாங்க.

அந்த 15 கோடி ரூபாய் எங்கே. அந்த தொகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை உறுப்பினர்கள் துருவ தொடங்கிட்டாங்க. இது ஆபீசர்களோட அலட்சியம் என கொதிக்கிறாங்க. அங்குள்ள ஆபீசர்களை இடமாற்றம் செய்யணும்னு வலியுறுத்தி வராங்க.

--------

* செயலிழந்த அலுவலகம்!

ப.பேட்டை வட்டாட்சியர் யார் என்ற பிரச்னை இன்னும் தீரவே இல்லை. ஒருத்தர் நிர்வாக தீர்ப்பாய உத்தரவு பெற்று வந்தும் கூட அவருக்கு பதவி நாற்காலி கிடைக்கல.

அறநிலையத் துறையில் இருந்த பெண் அதிகாரியை மாவட்ட பெரிய ஆபீசர் நியமித்தார். ரெண்டு பேர் ஒரு பதவிக்கு நேற்று வரைக்கும் முடிவு தெரியாமல் போனதால் அலுவலகமே செயலிழந்து கிடக்குது.

இதுக்கு மத்தியில், பெண் ஆபீசர் பெயரில் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிட்டாரு. ஆனாலும் அவர் ஜாமின் வாங்கிட்டாராம். நானே வட்டாட்சியர் என்று 'பவர்' காட்டுறாரு.

------

* பிளாக் லிஸ்டில் யார்?

மா.குப்பம் --- குப்பம் இணைப்பு ரயில் திட்டம், 21 கி.மீ., பணிகளுக்காக 20 ஆண்டுகள் எடுத்தாச்சு. ஆனாலும் முக்கால்வாசி பணிகள் தான் முடிஞ்சுது. இன்னும் 5.8 கி.மீ., வேலை மட்டுமே நடக்க வேணும்னு சொல்றாங்க.

இன்னும் எத்தனை ஆண்டுகள் பொறுத்திருக்க வேணுமோ. பல கோடி ரூபாய் திட்டத்தில் செயல்படாமல் இருந்தது ஒப்பந்ததாரரின் மெத்தனமா அல்லது யாராவது அந்த நிதி தொகையை தின்று ஏப்பம் விட்டாங்களா. காலக்கெடு முடிந்தும் அதன்படி செயல்படாமல் போனாங்களா. இதில் யாரை பிளாக் லிஸ்டில் வச்சிருக்காங்க. அரசியல் அதிகாரம் படைத்தவங்களுக்கு உரிய கமிஷன் போய் சேர்ந்ததால் தான் கண்டுக்கலயோ?

***

Advertisement