கடித்த பாம்புடன் வந்த தொழிலாளி

கொடைக்கானல்: கொடைக்கானல் கூலித் தொழிலாளி தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்தவர் சிவாஜி 65, கூலித்தொழிலாளியான இவர் நேற்று காலை பெருமாள் மலைப்பகுதியில் உள்ள தோட்டத்தில் காபி பழம் பறிக்க சென்ற போது செடியில் இருந்த பாம்பு கடித்தது. கடித்த பாம்பை பிளாஸ்டிக் பையில் பிடித்து கொண்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். வனத்துறையினர் தொழிலாளி கொண்டு வந்த பாம்பை வாங்கி வனப்பகுதியில் விட்டனர். பாம்பு கிரீன் பில்டர் வகையை சார்ந்தது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement