125 பேர் மீது குண்டாஸ்: எஸ்.பி.,

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2024ல் 125 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.,பிரதீப் கூறினார்.

அவரது செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: 2024ல் 63 வழிப்பறி வழக்குகளில் 60 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 47 கொலை வழக்குகள் பதியப்பட்டு 47 வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய 76 பேர் உட்பட 2024ல் மட்டும் 125 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 80 வழக்குகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மது அருந்துதல், போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்களிடம் ரூ.20.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 306 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மணல் திருட்டு தொடர்பாக 23 வழக்குகள் பதியப்பட்டு 28 வாகனங்கள் பறிமுதல் செய்து 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement