தேசிய தடகள போட்டிக்கு தேர்வு

திண்டுக்கல்: சென்னை திருத்தணியில் பள்ளிகளுக்கு இடையிளான தடகள போட்டி நடந்தது. 14 வயதுபிரிவில் அச்யுதா பப்ளிக் பள்ளி 9 ம் வகுப்பு மாணவன் சர்வேஷ் தேர்வு செய்யபட்டார்.

இவர் ஜார்கண்ட் மாநிலத்தில் நடக்க உள்ள தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த சவுத் சூன் ரோல்பால் சாபியன்ஷிப் போட்டியில் அச்யுதா பப்ளிக் பள்ளி 10 ம் வகுப்பு மாணவி கீர்திகா ராஜன் 2ம் இடம் பெற்றார்.

இவரும் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார்.

இவர்களை பள்ளி செயலாளர்கள் மங்கள்ராம், காயத்ரி மங்கள்ராம். முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன், ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா, பத்மநாபன், ராஜசுலோக்சனா, மகேஷ்வரி, விஜயசாந்தி.

ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரிய ஆசிரியைகள், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன்பாராட்டினர்.

Advertisement