மூன்று லட்சம் ருத்ராட்சங்களால் அலங்கரித்த தெருவடைச்சான் சப்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள் மெய்சிலிர்ப்பு
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், 3 லட்சம் ருத்ராட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி வீதியுலா வந்தது, பக்தர்களை மெய்சிலர்க்க வைத்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. தினமும் இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. வரும் 12ம் தேதி தேரோட்டம், 13ம் தேதி தரிசனம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு 5ம் நாள் உற்சவமான 'தெருவடைச்சான்' நடந்தது.
இந்தியாவிலேயே முதல் முறையாக, காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட, 3 லட்சம் ருத்ராட் சங்களை கொண்டு, தெருவடைச்சான் சப்பரம் ஜோடிக்கப்பட்டது.
3 லட்ச ருத்ராட்சங்களால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகள், சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஏராளமான சிவபக்தர்கள், விடிய விடிய மேளதாளங்களுடன் நடனம் ஆடி சுவாமி தரிசனம் செய்தனர்.