சர்வதேச மாநாட்டில் என்.எல்.சி.,க்கு விருது

நெய்வேலி: சர்வதேச சுரங்க தொழில் நுட்ப மாநாட்டில், என்.எல்.சி., நிறுவனத்திற்கு புதுமையாக்க விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஒடிசாவில், பாதுகாப்பான மற்றும் நிலையான சுரங்க தொழில்நுட்பம் தொடர்பான மூன்றாவது சர்வதேச மாநாடு நடந்தது. இதில், சுரங்கத் துறையில் என்.எல்.சி., நிறுவனத்தின் முயற்சிகள் மற்றும் புதுமையான நடைமுறைகளை அங்கீகரிக்கும் வகையில், புதுமையாக்க விருது வழங்கப்பட்டது.

இந்த உயரிய விருதை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளிக்கு, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள, இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் மற்றும் பேராசிரியர் டி.என்.சிங் வழங்கினார்.

விருது பெற்ற என்.எல்.சி., சேர்மன் பிரசன்னாகுமார் மோட்டுபள்ளி பேசுகையில், 'சுரங்கத் துறையில் புதுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொறுப்பான நடைமுறைகளை பின்பற்றுவதில் என்.எல்.சி.,யின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டிற்கு இந்த விருது ஒரு சான்றாகும்' என, தெரிவித்தார்.

Advertisement