அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் சிக்கலான அறுவை சிகிச்சையில் சாதனை

புதுச்சேரி: அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில், நோயாளியின் சிறுநீரகத்தை அகற்றாமல் புற்றுநோய் கட்டியை ரோபோ உதவியுடன், டாக்டர் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர்.

வங்கதேசத்தை சேர்ந்த 40 வயது நோயாளி ஒருவர், சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டருக்கு சிகிச்சைக்கு வந்தார். இந்த நோயாளி ஏற்கனவே வேறொரு மருத்துவமனையில், காண்பித்தபோது, சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என, கூறி உள்ளனர்.

இந்நிலையில், சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் மருத்துவக் குழுவினர், அந்த நோயாளிக்கு பரிசோதனை செய்தனர். அதில், சிறுசீரக ரத்த நாளம் அருகே, மிக சிக்கலான இடத்தில், புற்றுநோய் கட்டி இருந்ததை கண்டறிந்தனர்.

சிறுநீரகத்தை அகற்றாமல், புற்றுநோய் கட்டியை அகற்ற மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, அந்த நோயாளிக்கு, ரோபோ உதவியுடன், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சிறுநீரகத்தை அகற்றாமல், அறுவை சிகிச்சை செய்து, புற்றுநோய் கட்டியை அகற்றி, மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்போலோ புரோட்டான் மருத்துமனை புற்றுநோயியல் துறை இயக்குனர் ஹர்ஷத் ரெட்டி கூறுகையில், 'சிறுநீரகத்தில், முக்கியமான சிக்கலான பகுதியில், சிறுநீரகத்தை அகற்றாமல், புற்றுநோய் கட்டியை, ரோபோடிக் மற்றும் தொழில்நுட்ப யுத்தியை பயன்படுத்தி, மருத்துவர்கள் ராகவன், மாதவ் திவாரி ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து, சாதனை படைத்துள்ளனர். அவர், நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்' என்றார்.

Advertisement