வங்கி ஊழியர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வங்கி ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திரா மாநிலம் சூலுார்பேட்டை அடுத்த தள்ளம்பேடு சேர்ந்தவர் சதிஷ்குமார்,31; இவர், இந்தியன் வங்கியில் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

கள்ளக்குறிச்சி வ.உ.சி., நகரில், இரு கண்களும் தெரியாத தனது தந்தை ஹரிநாத்துடன், வாடகை வீட்டில் வசித்து வந்தார். சதிஷ்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில், கடந்தாண்டு டிச., 23ம் தேதி விவகாரத்து உத்தரவானது. இதனால் கடந்த சில நாட்களாக சதிஷ்குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 9.00 மணிக்கு சதிஷ்குமார் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement