ஆரோவில் வந்த கோவா மாணவர்கள் கைத்தொழில் பயிற்சியில் பங்கேற்பு

வானூர்: ஆரோவில் பகுதிக்கு கல்வி சுற்றுலா வந்த கோவா மாணவர்கள், ஈகை ஒர்க் ஷாப்பில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோவா பகுதியில் இருந்து மாணவர்கள் குழு வினர், நேற்று சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு கல்வி சுற்றுலா வந்தனர். அவர்கள் ஆரோவில்லில் மாத்ரி மந்திர், யூனிட்டி பெவிலியன், சாவித்ரி பவன் உள்ளிட்ட முக்கிய இடங்களை சுற்றிப் பார்த்தனர். அங்கு அரவிந்தர், அன்னையின் கொள்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் கல்வி அமைச்சகம் வகுக்கும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது, மத்திய கல்வி அமைச்சகம் வகுக்கும் தற்போதைய மேம்பாட்டு திட்டங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அடல் இங்குபேஷன் சென்டர், இந்திய தொழில் நுட்ப நிறுவனத்துடன் (ஐஐடி) ஆரோவில் இணைந்து செயல்படவுள்ள முக்கிய பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து கோவா மாணவர்கள், ஆரோவில் அறக்கட்டளையின் ஆதரவுடன் செயல்படும் ஈகை ஒர்க் ஷாப்பிற்கு சென்றனர். அங்கு தேங்காய் சிப்பி, பனை இலை மற்றும் மரத்தைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை கிராமத்து இளைஞர்கள், பெண்களால் உருவாக்கப்படுகின்றன.

இந்த ஒர்க் ஷாப்பில் கோவா மாணவர்கள், கைத்தொழில் மற்றும் இசைக்கருவிகளை உருவாக்கும் பயிற்சி பட்டறைகளில் பங்கேற்று, புல்லாங்குழல் உள்ளிட்ட கருவிகளை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.

Advertisement