சீமான் கட்சிக்கு கிடைத்தது அங்கீகாரம்

புதுடில்லி: நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அங்கீகரித்து தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

சீமானை தலைமை ஒருங்கிணைப்பாளராக கொண்டு கடந்த 2010ல் நாம் தமிழர் கட்சி துவங்கப்பட்டது. 2016ல் இருந்து இந்த கட்சி தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.

கட்சிக்கு தேர்தல் அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் இரட்டை மெழுகுவர்த்தி, விவசாயி, மைக் ஆகிய சின்னங்களில் போட்டியிட்டனர்.

இந்நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 8.22 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை தலைமை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது.

கூடவே, தேர்தல் கமிஷனின் பட்டிய லில் உள்ள ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்யலாம் எனக் கூறியுள்ளது.

இந்த தகவலை, நாம் தமிழர் கட்சி தன் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Advertisement