ரேஷன் கடையில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம், தாட்டித்தோப்பில் பகுதிநேர ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை முறையான பராமரிப்பு இல்லாததால், ரேஷன் கடை வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.

இதில், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சமடையும் நிலை உள்ளது. இதனால், ரேஷன் கடைக்கு வருவோர் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, ரேஷன் கடை வளாகத்தில் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயனாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement