விஜயகரிசல்குளம் அகழாய்வு கண்ணாடி மணி கண்டெடுப்பு
சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில், உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,020 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது புதிதாக இரு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடக்கின்றன. இதில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல் மற்றும் பெரிய கண்ணாடி மணி கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''நம் முன்னோர், வட மாநிலங்களில் இருந்து சங்குகளை பெற்று வளையல்களை தயாரித்துள்ளனர். அதில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அலங்காரம் செய்துள்ளனர்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement