மாயமாகி வரும் சுடுகாடு சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார், பால்நல்லுார் ஊராட்சியில், பால்நல்லுார் -- ஆரநேரி சாலையோரம் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. மேலும், எரிமேடையின் மீது முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், எரிமேடையில் வேர்கள் படந்து, கான்கிரீட் சேதமாகி வருகிறது.

இதனால், இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சுடுகாடு வளாகம் மற்றும் எரிமேடையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement