விவேகானந்தா கல்லுாரியில் 'சிறகை விரி; உயர பற' நிகழ்ச்சி
விவேகானந்தா கல்லுாரியில் 'சிறகை விரி; உயர பற' நிகழ்ச்சி
திருச்செங்கோடு,: திருச்செங்கோடு விவேகானந்தா கல்லுாரியில், பிளஸ் 2 மாணவியருக்கான, 'சிறகை விரி, உயர பற' நிகழ்ச்சி நடந்தது. தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். அக்னி சிறகுகளின் தலைவர் மகேந்திரன் வரவேற்றார். அட்மிஷன் நிர்வாகி சவுண்டப்பன் ஒருங்கிணைத்தார். மூத்த ஊடகவியலாளர் மகேஸ்வரன், ஊக்குவித்து பேசினார். சிகரம் சதீஸ்குமார், மாணவர்களின் நலன், உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
ஊக்குவிப்பு பேச்சாளர் விதிமதி தென்றல், தொழில்நுட்ப திறன்களின் முக்கியத்துவம் குறித்தும், வாசிப்பு திறனையும், ஞாபக சக்தியின் ஆற்றல் பற்றியும் அதன் நுணுக்கங்களையும் எடுத்துரைத்தார். மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மகேஸ்வரி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி, மாணவியரின் நினைவாற்றல், தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது. எதிர்கொள்ளும் பொது தேர்வில், மாணவியர் அதிக மதிப்பெண் பெற்று வெற்றிபெற பயிற்சியளிக்கப்பட்டது. 'நம்ம ஊரு; நம்ம பள்ளி' மாநில ஒருங்கிணைப்பாளர் சசிகுமார், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.