பக்தர்கள் போராட்டம் சொர்க்கவாசல் திறப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன், மேல வீரராகவபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இங்கு, போதிய நிதியின்மையால் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சொர்க்கவாசல் திறப்பு கிடையாது என, நிர்வாக தரப்பில் கூறியதாக தெரிகிறது.

எனவே, ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கோவில் முன், துண்டை விரித்து ரோட்டில் உட்கார்ந்து, நிதி சேகரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அறநிலையத் துறையினர் மற்றும் போலீசார் அவர்களுடன் பேசினர்.

இதையடுத்து, கோவில் செயல் அலுவலர் தங்க சுதா, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடத்தப்படும் என உறுதியளித்தார். மாலையில், சொர்க்க வாசல் திறப்பு விழா கோவிலில் நடந்தது.

Advertisement