வரும் 15, 26ல் மதுக்கடைக்கு லீவு




வரும் 15, 26ல் மதுக்கடைக்கு லீவு


நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், வரும், 15ல் திருவள்ளுவர் தினம், 26ல் குடியரசு தினம் என, இரண்டு நாட்கள், அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் மூட வேண்டும். மேலும், டாஸ்மாக் பார்கள், ஓட்டல் பார்கள், லைசென்ஸ் பெற்ற பார்கள் உள்ளிட்ட அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது. மேற்கண்ட, இரண்டு நாட்களில், மதுபான கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும், 14ல்...ப.வேலுார் தாலுகாவில், அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாள் விழா, வரும், 14ல், ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் கொண்டாடப்படுகிறது. விழாவில், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த, 5,000 பேர் பங்கேற்பர். அதனால், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில், ஜேடர்பாளையம் மற்றும் ப.வேலுார் போலீஸ் எல்லைக்குட்பட்ட, 10 அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகளை மூட வேண்டும்.
அதன்படி, கபிலர்மலையில் உள்ள பரமத்தி சாலை, பாண்டமங்கலம் சாலை, ஜேடர்பாளையம் சாலை, பாகம்பாளையம், சோழசிராமணி, வடகரையாத்துார், ப.வேலுார் நான்கு சாலை, பழைய புறவழிச்சாலை, சிவா தியேட்டர் முனை, கபிலர்மலை சாலை உரம்பு ஆகிய பத்து, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement