வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

ஆண்டிபட்டி:வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து உள்ளது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 2ம் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக டிச. 18ல் திறக்கப்பட்ட நீர், தேவைக்கு ஏற்ப இன்றளவும் அணையில் இருந்து வெளியேறுகிறது.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1150 கன அடியாக உயர்த்தப்பட்டது. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது. நேற்று காலை அணை நீர்மட்டம் 64.85 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 730 கன அடி.

Advertisement