தியாகி காளியண்ணன்பிறந்தநாள் கொண்டாட்டம்




தியாகி காளியண்ணன்பிறந்தநாள் கொண்டாட்டம்
நாமக்கல்,: மறைந்த இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினரும், சுதந்திர இந்தியாவின் முதல் லோக்சபா எம்.பி.,யுமான தியாகி காளியண்ணனின், 104வது பிறந்தநாள் விழா, நாமக்கல்லில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். கொங்கு வேளாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், மாநில செய்தி தொடர்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தியாகி காளியண்ணன் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன், வட்டார தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement