சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ராசிபுரம்: சாலை பாதுகாப்பு குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஜன., முதல் வாரம் போலீசார், வட்டார போக்குவரத்து துறை சார்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி, ராசிபுரம் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஏ.டி.சி., டிப்போவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நித்யா பங்கேற்று, வாகன ஓட்டிகள், பாதசாரிகளிடம் சாலை விதிகளை பின்பற்றுவது, வாகனம் ஓட்டும்போது ஹெல்ெமட் அணிவது, கார், பஸ், லாரி போன்ற வாகனங்கள் ஓட்டும்போது கட்டாயம் அனைவரும், 'சீட்' பெல்ட் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு குறித்து பேசினார். அதேபோல், தங்கள் குழந்தைகள், 18 வயதுக்கு குறைந்தவராக இருந்தால் கண்டிப்பாக அவர்களிடம் டூவீலர் கொடுக்க கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement