'கனவு இல்லம்' கட்ட6,040 பேருக்கு ஆணை

'கனவு இல்லம்' கட்ட 6,040 பேருக்கு ஆணை


நாமக்கல்: திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், மொளசி ஊராட்சியில், 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் கட்டப்படும் வீடுகளை, கலெக்டர் உமா ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாத வகையில், அனைவருக்கும் வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக பயனாளிகள் நம் நாமக்கல் மாவட்டத்தில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில், 6,040 பயனாளிகளுக்கு, 213.21 கோடி ரூபாய் மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement