நெல் சாகுபடி பரப்பு அதிகரிப்பு
தர்மபுரி: பெஞ்சல் புயலால் நிரம்பிய நீர் நிலைகளால், நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்-தனர்.
மாவட்டத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்-பார்த்த அளவு பெய்யாத நிலையில், மானாவாரி பயிர் சாகுப-டிக்கு விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். அதனை தொடர்ந்து, துவங்கிய வடகிழக்கு பருவ மழையில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த ஆண்டு நவ.,30, டிச.,1, 2 ஆகிய மூன்று நாட்கள் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அணைகள், ஏரிகள் உட்பட நீர்நி-லைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.நடப்பு ராபி பருவத்தில் கடந்த ஆண்டு டிச.,10 வரை நடந்த கணக்கெடுப்பின்படி, தர்மபுரி மாவட்டத்தில், 10,544 ஏக்கர் பரப்பில் விவசாயிகள் நெல் நடவு செய்திருந்தனர். விவசாய நிலங்களில் தேங்கியிருந்த மழை நீர் வடிந்த பின், அரூர், பாப்பி-ரெட்டிபட்டி, மொரப்பூர், கடத்துார், தர்மபுரி உட்பட மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் நடவு தொடங்கியது. இதில் டிச., 30 வரை, 11,915 ஏக்கர் அளவிற்கு நெல் சாகுபடி பரப்பு விரிவடைந்த நிலையில், ஜன., இறுதிக்குள் கூடுதலாக, 2,000 ஏக்கர் வரை சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.