சிறுமிக்கு பாலியல் சீண்டல் முதியவருக்கு 20 ஆண்டு விழுப்புரம் போக்சோ கோர்ட் தீர்ப்பு

விழுப்புரம்,: சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த கீழ்கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்,56; தொழிலாளி. இவர், கடந்த 17.8.2020ம் தேதி, வீட்டின் அருகே விளையாடிய 6 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார், வெங்க டேசனை கைது செய்து, அவர் மீது விழுப்புரம் போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வினோதா, குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.6 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

அதனையொட்டி, வெங்கடேசன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement