ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசார் தீவிர சோதனை
தர்மபுரி: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, தர்-மபுரி வழியாக செல்லும் ரயில்கள் மற்றும் பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அறுவடை திருவிழாவான, பொங்கல் பண்டிகை தமிழகம் முழு-வதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று முதல் ஜன., 18 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறையை கொண்-டாட நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் நேற்று முதல் கார், பஸ், ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்
படுகின்றன.
ரயில்களில் வரும் பயணிகள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்-களை தவிர்க்க, தர்மபுரி வழியாக வரும் ரயில்களில் ரயில்வே போலீஸ் மற்றும் ஆர்.பி.எப்., போலீசார் சோதனை மேற்கொண்-டனர். ரயில் பயணத்தின்போது, பயணிகளின் உடைமைகள் பாது-காப்பாக வைத்து கொள்வது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்-தினர். தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின், அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில், சேலம் மற்றும் பெங்களுரூ மார்க்கமாக வரும், 14 தினசரி எக்ஸ்பிரஸ், 8 வாராந்திர எக்ஸ்பிரஸ், 6 பயணிகள் ரயில், 2 வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்கள் மற்றும் பயணிக-ளிடம் சோதனை செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி முதல், சேலம் மாவட்டம் ஓமலுார் வரையிலான பகுதியில், ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் சந்தோஷ் கவுன்கர் தலைமையில், 17, ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., சுந்தரராஜன் தலைமையில், 18, மற்றும் ஊர்காவல் படையினர், 10 பேர் என, 24 மணி நேரமும் தொடர் கண்கா-ணிப்பில் ஈடுபட்டு வருவதாக, ரயில்வே போலீசார் தெரிவித்-தனர்.