கற்கள், மண், கிரானைட் கடத்திய 4 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, கனிம வள பிரிவு உதவி புவியியலாளர் கோகுல கண்ணன் மற்றும் அதிகாரிகள் மேல் சோமார்பேட்டை, டோல்கேட், சோமநாதபுரம் பகுதிகளில் ரோந்து சென்றனர்.

அங்கு கேட்பாரற்று இருந்த நான்கு லாரிகளை சோதனை செய்-ததில், 3 யூனிட் மண், 3 யூனிட் கற்கள் மற்றும் 7 யூனிட் கிரானைட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா, குருபரப்பள்ளி போலீசில் அளித்த புகார்-படி போலீசார் வழக்கு பதிந்து, 4 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement