இரண்டு கோவில்களில் திருட்டு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த தட்ரஹள்ளி கிராமத்தில், கக்கு மாரியம்மன் கோவில் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து, அதிலிருந்து ஒன்றேகால் பவுன் தாலி திருடிச் சென்றுள்ளனர். அதேபோல் கரியகவுண்டன்கொட்டாய் பகுதியில் உள்ள மாரியப்பன் கோவில் பூட்டை உடைத்து, மூன்று கிராம் தங்கத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்து, நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement