மனநலம் பாதித்த வாலிபர் மாயம் போலீஸ் விசாரணை
புதுச்சேரி,: வில்லியனுார் அருகே மாயமான வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த கூடப்பாக்கம் மாந்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் மகன் சக்திவேல், 43. சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்.
இவர் அவ்வப்போது வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் திரும்பி வந்து விடுவார்.
கடந்த மாதம் 25ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்திவேல் இதுவரை வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement