வித்யாபவன் மேல்நிலை பள்ளியில் விளையாட்டு போட்டி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி தேங்காய்த் திட்டு வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் 15வது ஆண்டு விளையாட்டு போட்டி துவக்க விழா நடந்தது.

விளையாட்டு துறை துணை இயக்குனர் வைத்தியநாதன் தலைமை தாங்கி, விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ரேகா ராஜசேகரன் வரவேற்றார்.

விழாவில், மூன்று விதமான கொடிகளை ஏந்தி, 4 குழுக்களை கொண்ட மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மூலம் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, போட்டிகள் துவங்கியது.

இதில், எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தன.

ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சிலம்பரசன், ஜனனி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement