ஸ்ரீவி., நகராட்சி தூய்மை பணியாளர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலபுரம் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் 57. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த நிலையில் சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாததால் சரிவர வேலைக்கு செல்ல இயலவில்லை. இருந்த போதிலும் தனக்கு பதிலாக வேலைக்கு சம்பளம் கொடுத்து வேறு ஒரு ஆளை அனுப்பி வேலை செய்துள்ளார்.

இதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மன வேதனையடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் காலையில் ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்தனர்.

Advertisement