ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
-திருமங்கலம்: பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
தென் மாவட்டத்தில் மிகப்பெரியதான திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தை நடக்கும். அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று நடந்த ஆட்டுச் சந்தையில் அதிகாலை 4:00 மணி முதல் காலை 11:00 மணி வரை ஆடுகள் விற்பனை நடந்தது. ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்கப்பட்டன. மொத்தம் ரூ. 5 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகின.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement