ஈரோடு கிழக்கில் தி.மு.க., போட்டி

மதுரை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., போட்டியிடுகிறது.இத்தொகுதியில் எம்.எல்.ஏ., ஆக இருந்த தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் உடல் நலக்குறைவால் காலமானார். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்., 5ல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்கிடையில் இத்தொகுதியில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிழக்கில் தி.மு.க.,தான் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் முதல்வர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்., விட்டு கொடுத்துள்ளது. அங்கு தி.மு.க., போட்டியிட உள்ளதாக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

Advertisement