உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா
விழுப்புரம், : விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரி கூட்டரங்கில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.
விழாவிற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் 'கேக்' வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, நவீன கைப்பேசி, மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், முடநீக்கு சாதனம், செயற்கை கால் மற்றும் செயற்கை கை, நவீன செயற்கை கால் போன்ற உபகரணங்கள் வழங்கப் படுகிறது.
பார்வையற்றோருக்கு பிரெய்லி கை கடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல், காதுகேட்கும் கருவி வழங்கப்பட்டு வருகிறது' என தெரிவித்தார். பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த 4 டாக்டர்கள், 13 சிறப்புப்பள்ளி தாளாளர்கள், 15 சங்க நிர்வாகிகளை பாராட்டி, கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார்.
இதில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி, அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் டாக்டர் கிருஷ்ணலீலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.