விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

விழுப்புரம் : விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஏகாதசி முன்னிட்டு, நேற்று விடியற்காலை 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருளி, அருள் பாலித்தார்.

இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் ஆர்.கே.மோட்டார்ஸ் குபேரன், பாலமுருகன், அர்ச்சனா சுப்புராமன், பை-சைக்கிள் ேஷாரூம் வருண்குமார், தருண்குமார், முன்னாள் கவுன்சிலர் தனுசு, பாலமணிகண்டன், ஓம்சக்தி கன்ஸ்ரக்ஷன்ஸ் சதீஷ்ராஜாராம், புரபொஷனல் தியாகராஜன், சுமங்கலி ரியல் எஸ்டேட் கருணாநிதி, ஏ.எஸ்.ஜி., கோபி, ஹரி ஜூவல்லரி கொளஞ்சியப்பன், மகேஷ், ஜி.டி. தங்க மாளிகை ராஜ்குமார், பாலாஜி, சி.ஆர்.ஜோதி லட்டு கமிட்டி உறுப்பினர்கள் ராஜா, வீரமணி, கோவிந்தன், கர்ணா, செல்வம், ஜி.டி.லஷ்மி ஜூவல்லரி சுசில் குமார், விழுப்புரம் ஆர்யநிவாஸ் குணா, சுந்தர் ஸ்கேல்ஸ் சங்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல், பூவரசன்குப்பம் லஷ்மி நரசிம்மர் கோவில், விழுப்புரம் திருநகர் மஹாலஷ்மி, குபேர லஷ்மி கோவில், கிருஷ்ணா நகர் கோகுல கிருஷ்ணர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement