கிரிக்கெட் லீக்: ஒட்டன்சத்திரம் நைக் அணி வெற்றி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் ஒட்டன்சத்திரம் நைக் அணி வெற்றி பெற்றது.

ஆர்.வி.எஸ்., கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பழநி டாமினேட்டர்ஸ் சிசி அணி 9.4 ஓவர்களில் 43 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

பனுவால்லட்டி 5, ஸ்ரீலோகேஷ் 4 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்ச் சிசி அணி 11.4 ஓவர்களில் 25 ரன்களில் ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. நடேசன் 6, தினேஷ்குமார் 4 விக்கெட் எடுத்தனர். பி.எஸ்.என்.ஏ., மைதானத்தில் நடந்த போட்டியில் பழநி யுவராஜ் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 37.4 ஓவர்களில் 166 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஜெகதீசன் 45, மகேஸ்வரன் 25, ஜேகப் 33 (நாட்அவுட்) ரன், ரியாஸ்கான் 5, ஜெயகார்த்திபன் 4 விக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ஸ்ரீவசந்தாஸ் ஸ்வீட்ஸ் சிசி அணி 21.4 ஓவர்களில் 110 ரன்களில் ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. சுதீஸ் 5, மலையாளசாமி 3 விக்கெட் எடுத்தனர். என்.பி.ஆர்., கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஒட்டன்சத்திரம் நைக் சிசி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.

தருஷன் 49, ஆனந்தன் 80, சரத்ரிச்சர்ட் 38 ரன், நாட்டுதுரை 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த நத்தம் என்.பி.ஆர்., சிசி அணி 33 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. அன்பரன் 58, அமரேஷ்காளியப்பன் 30, உதயகுமார் 33 (நாட்அவுட்) ரன், ஆனந்தன் 3 விக்கெட் (ஹாட்ரிக்) எடுத்தார்.

பிரஸித்தி வித்யோதயா கோப்பைக்கான 2வது டிவிசன் போட்டிகள்ஆர்.வி.எஸ்., கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நத்தம் என்.பி.ஆர்.ஜி.ஐ., அணி 22 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

ரமேஷ்புகழேந்தி 32, பாண்டியராஜன் 38 ரன், அருண்பாண்டியன் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கிளப் அணி 18.3 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியை தழுவியது. சுந்தரவேல் 4, கார்த்திக் 3 விக்கெட் எடுத்தனர். அதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.

அருண்பிரகாஷ் 33, விவேக் 30, செல்வகுமரன் 37 (நாட்அவுட்) ரன் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த ஒட்டன்சத்திரம் சாமுராய் சிசி அணி 20.5 ஓவர்களில் 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சாமுராய் 6 விக்கெட்.

ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் கோப்பைக்கான 3வது டிவிசன் போட்டிகள்ரிச்மேன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேடசந்துார் சீனிபாலா சிசி அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. லோகநாதன் 41 ரன். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் காட்சன் அணி 24 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வெங்கடேசன் 34 ரன்.

அதே மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் திண்டுக்கல் பாரத் சிசி அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. புனிதன் 80, நிரஞ்சன் 44 ரன், இளங்கோ, முத்து தலா 3 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த நல்லாம்பட்டி யங்ஸ்டர்ஸ் சிசி அணி 25 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இளங்கோ 66 (நாட்அவுட்) ரன்.

Advertisement