பழைய கலெக்டர் அலுவலகத்தில் காலாவதி தீயணைப்பான்கள்
விருதுநகர்: விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் காலாவதியான தீயணைப்பான்களை புதுப்பிக்க தீயணைப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பான்கள் 2024 அக்.31 உடன்காலாவதியாகி விட்டன. 3 மாதமாகியும் புதுப்பிக்கப்படவில்லை.
அரசு அலுவலகங்கள், பெரும் வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் ஆகிய பகுதிகளில் தீயணைப்பான்கள்கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
இவை ஏ, பி, சி, சி.ஓ2., என நான்கு வகைப்படும். கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலும் 'சி' வகை தீயணைப்பான்கள் உள்ளன. இதை ஆண்டிற்கு ஒரு முறை 'ரீபில்' செய்ய வேண்டும்.
இங்கு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பான்கள் உள்ளன. இவை அக். 31ல் காலாவதியாகி விட்டன. ரீபில் செய்யப்படாத தீயணைப்பான்கள் தீயை அணைக்காது.
அதன் வீரியத்தன்மையை இழந்துவிடும். தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக காலாவதி தீயணைப்பான்களை ரீபில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.