விழிப்புணர்வு கருத்தரங்கம்

சாத்துார்: சாத்துார் எஸ். ஆர்.என்.எம். பாலிடெக்னிக் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் தனலட்சுமி தலைமை வகித்தார். சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகு சுந்தரம் வரவேற்றார்.

விருதுநகர் டி.எஸ்.பி., யோகேஷ் குமார், சாத்துார் டி.எஸ்.பி., நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சாலை விதிகள் பாதுகாப்பு குறித்து பேசினர்.

நுகர்வோர் கண்காணிப்பு குழு உறுப்பினர் தமயந்தி தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் வீரனன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement