புகையான் தாக்குதலை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் வேளாண் துறை ஆலோசனை

தேனி: நெல்சாகுபடி செய்துள்ள பகுதியில் இரவில் விளக்குப்பொறி, மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைத்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் என வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் திலகர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

அவர் கூறியதாவது: குளிர்காலம் என்பதால் நெற்பயிரில் தண்டில் துளையிட்டு புகையான் நோயை பூச்சிகள் ஏற்படுத்துகின்றன.

இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. புகையான் நோய் ஏற்படாமல் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறையினர் கூறியதாவது: பயிர் நடவு செய்யும் போது குறிப்பிட்ட இடைவெளி இருக்க வேண்டும்.

பாதிப்பு அறிகுறிகள் தெரிந்தால் வயலில் நீரை தேக்கி வைக்காமல், நீர் வடிந்த பின் பாய்ச்ச வேண்டும். வேளாண் துறையினர் பரிந்துறையில் உரங்கள் இட வேண்டும்.

நோய் ஏற்படுத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த இரவில் விளக்குப்பொறி, மஞ்சள் நிற ஒட்டுப்பொறி வைக்க வேண்டும். பூச்சி மருந்துகளை நெற்பயிரின் அடிப்பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும்.

இந்நோயினை கட்டுப்படுத்த ஏக்கருக்கு அசிட்டாபிரைடு 20-40 கிராம், பூப்ரோபென்சின் 320 மி.லி., கார்போசல்பால் 400 மி.லி., பிப்ரோனில் 400 மி.லி., இமிடாகுளோபிரிட் 40-50 மி.லி., இதில் ஏதாவது ஒன்றை தெளிக்கலாம் என்றார்.

Advertisement