சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் சார்பில், ஈ.வெ.ரா.வை அவதுாறாக பேசிய நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

தி.க., மாவட்ட அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.

இந்திய கம்யூ., கட்சி (எம்.எல்.,) நிர்வாகி சிவக்குமார், திராவிடர் விடுதலை கழக மாவடட அமைப்பாளர் ராயன், நாட்டுமாடு நலச்சங்க மாவட்டச் செயலாளர் சீராளன், தமிழ் தேச மார்க்சிய மாவட்டச்செயலாளர் பிரதீப், தமிழ் மக்கள் உரிமை முன்னணி மாவட்ட அமைப்பாளர் மதியவன் இரும்பொறை உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement