தற்காப்பு கலை பயிற்சி நிறைவு

புதுச்சேரி : தருமாபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவி களுக்கான தற்காப்பு கலை பயிற்சி நிறைவு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் பஜூலுதீன் தலைமை தாங்கினார். பயிற்சியாளர் சிவமதி வழிகாட்டுதலின்படி தற்காப்பு கலை பயிற்சி பெற்ற மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

விழாவில், புதுச்சேரி அமெச்சூர் கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் சுந்தர்ராஜன் கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இதில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சக்திவேல், உறுப்பினர்கள் கனகவள்ளி, புவனேஸ்வரி, நளினி உள்ளிட்ட ஆசிரி யர்கள், மாணவர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement