கெட்டுப்போன மீன்கள் பறிமுதல், அபராதம்

போடி: போடி பஸ்ஸ்டாண்ட், காமராஜ் பஜார், பி.ஹைச்., ரோடு. பள்ளி அருகே உள்ள பெட்டி கடைகள், உணவு கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராகவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் மதன்குமார், போடி நகராட்சி சுகாதார ஆய்வாளர் திருப்பதி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பி.ஹைச்., ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் கெட்டுப் போன 50 கிலோ மீன்கள், பெருமாள் கோயில் அருகே பேக்கரியில் கெட்டு போன மிக்சர், காலாவதியான பிரட் பாக்கெட், காமராஜ் பஜாரில் சிக்கன், பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள், பெட்டி கடைகளில் கலர் சாயம் பூசப்பட்ட காலாவதியான உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன. மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன.

Advertisement