அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி தலைமை தாங்கி சமத்துவ பொங்கலிட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன் வரவேற்றார்.
ஊராட்சி மன்ற தலைவர் பூவராகவன், பள்ளி ஆசிரியர் சண்முகம் ,ஆசிரியைகள் ரேவதி, விஜயலட்சுமி, சுகந்தி,சிலம்பம் குழு ஒருங்கிணைப்பாளர்கள் முத்துஏழுமலை,முத்துக்குமரன், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முடிவில் பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement