டூவீலர் மோதி பக்தர்கள் காயம்

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன் 26. மற்றும் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன் பழநி பாதயாத்திரை சென்றனர்.

காட்ரோடு அருகே செல்லும் போது பின்னால் வந்த டூவீலர் பக்தர்கள் மீது மோதியது. இதில் நாகேந்திரன், செல்லமணி காயமடைந்தனர்.தேவதானப்பட்டி போலீசார் விபத்து ஏற்படுத்திய கோட்டைப்பட்டியைச் சேர்ந்த அறிவு கண்ணனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement