மெய்யூர் கிராமத்தில் சொர்க்கவாசல் திறப்பு

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சி. மெய்யூர் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி பூஜையும் நடைபெற்றது. லட்சுமி நாராயண பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

விழாவில் சி. மெய்யூர், அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருவெண்ணெய்நல்லூர் அகோபில மடத்திற்கு சொந்தமான ஜனகவல்லி தாயார் வைகுண்ட வாசகப் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

விக்கிரவாண்டி



விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கட வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆண்டாள், பெருந்தேவி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மகா தீப ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் இரவு சுவாமி மாடவீதி வழியாக ஊர்வலம் வந்தது.

Advertisement